சென்னையில் நடிகர் பிரவு வீடு முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

hqdefault

தங்கத்தில் இரும்பினை கலப்படம் செய்து விற்று வருவதாக கூறி கல்யாண் ஜூவல்லர்ஸ் -யை கண்டித்து சென்னையில் உள்ள நடிகர் பிரபுவின் இல்லத்தின் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் உள்ள கல்யாண் ஜுவலர்ஸ்-ல் அவ்வூரை சேர்ந்த ராமன் என்ற துப்புரவு தொழிலாளி நேற்று (05/10/2015) தங்க காதணி ஒன்றினை வாங்கியுள்ளார். தங்கத்தை வாங்கிய பின்னரே அந்த காதணியில் உள்ள கம்பிகளில் இரும்பு சேர்க்கப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் அக்கடைக்கு திரும்பிச் சென்று தான் செலுத்திய தொகையை திரும்பத் தர வேண்டும் அல்லது மாற்றுத் தங்கம் தர வேண்டும் என நகை கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அவர்கள் நகை எல்லாம் மாற்றித் தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என திமிராக பதில் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

20151dsad006004755

201dasda51006004755

இந்நிலையில், கல்யாண் ஜூவல்லர்ஸ் -ன் இச்செயலை கண்டிக்கும் விதமாக அக்கடை நகை விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரபுவின் இல்லத்தின் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தன.

20151fdsafdsg006004756

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ஏரானமான ஏழை மக்கள் சிறிது சிறிதாக தான் சேர்த்த பணத்தை வைத்து தங்க நகைகள் வாங்குகின்றனர். நடிகர் பிரபு போன்றோர் பணத்திற்காக இது போன்ற நகை கடை விளம்பரங்களில் நடிப்பதால், அது அதனை நம்பி வாங்கும் ஏழை மக்களின் வயிற்றில் நேரடியாக அடிக்கிறது.

fasfafsa

எப்படி மேகி விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன் மீது வழக்கு தொடரப்பட்டதோ அதே போல் நடிகர் பிரபுவின் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி செய்தால்தான் மேற்கொண்டு நடிகர்கள் விளம்பரத்தில் நடிக்கும் முன் வெறும் பணத்திற்காக மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர். அதோடு கலப்பட தங்கத்தை விற்ற கல்யாண் ஜுவலர்ஸ் மீது நடவடிக்கை எடுப்பதோடு கலப்பட தங்கத்தை பறிமுதல் செய்யக்கோரியும் அவர்கள் கோஷமிட்டனர்.

வீடியோ:-


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top