கவுதமாலா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்தது

60514d07-d3fc-4755-9d2c-a8b0fe235f68_S_secvpfமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில், சாண்டா கேட்டரினா பினுலா என்ற கிராமத்தில் கடந்த 2-ம் தேதி பெய்த பலத்த மழைக்கு பின்னர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 125 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. சம்பவத்தன்று 30 பேர் பலியாகினர், 600 பேரை காணவில்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

அந்த கிராமத்தில் தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 131 ஆக உயர்ந்துள்ளது. முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன ஆனது? என தெரியவில்லை. இருப்பினும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் இனி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்-சிறுமியர் மற்றும் கைக்குழந்தைகள் என தெரியவந்துள்ளது. இடிபாடுகளை தோண்டி தேடுதல் வேட்டை நடத்துகிற இடங்களில் எல்லாம், தங்களுக்கு அன்பானவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, அவர்களைப்பற்றி தகவல் கிடைக்கிறதா? என கண்ணீருடன் பலர் காத்திருப்பது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top