திருவாரூரில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க கூட்டம்: வைகோ–திருமாவளவன் கம்யூ. தலைவர்கள் பங்கேற்பு

d0d9866c-ec37-4daf-9943-78bdc6b8a072_S_secvpfடெல்டா மாவட்ட பாசனத்திற்கு கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தரகோரியும், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷெல்வாயு எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை 6 மணிக்கு பொதுகூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், எம்.எல்.ஏக்கள் பாலகிருஷ்ணன், உலகநாதன், ஆறுமுகம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ம.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுமா? என்பது இன்று மாலை தெரியவரும். எனவே இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக மக்கள் நல கூட்டியக்கத்தினர் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடந்தது. இதில் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோவை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top