பாரதீய ஜனதா கட்சியின் 27 வேட்பாளர்களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது

பீகார் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வருகிற 12–ந்தேதி நடக்கிறது.

முதல் கட்ட தேர்தல் நடக்கும் 49 தொகுதிகளில் மொத்தம் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 583 வேட்பாளர்களும், எப்படிப் பட்டவர்கள் என்று ஜனநாயக சீரமைப்புக் கழகத்தினர் ஆய்வு செய்தனர்.

வேட்பாளர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பல அதிர்ச்சியான தகவல்களும், ஆச்சரிய மூட்டும் தகவல்களும் கிடைத்தன.

583 வேட்பாளர்களில் 174 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிமினல்களில் 130 வேட்பாளர்கள் மிகவும் கொடூரமான குற்றம் செய்த கிரிமினல்களாவார்கள். கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, ஆள் கடத்தல், கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைத்தல் உள்பட பல குற்றச்சாட்டுக்கள் இந்த கிரிமினல்கள் மீது உள்ளது.

37 வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலை செய்த பயங்கர கொலையாளிகள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. சில வேட்பாளர்கள் மீது 5–க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வர்சாலிசுஞ்ச் என்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிமினல்களை வேட்பாளர்களாக நிறுத்தியதில் பாரதீய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது. அந்த கட்சியின் 27 வேட்பாளர்களில் 10 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. ஐக்கிய தளம் வேட்பாளர்களில் 9 பேர் குற்றவாளிகள்.

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்களில் 7 பேர், சமாஜ்வாதி வேட்பாளர்களில் 7 பேர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் 6 பேர், ராஷ்டீரிய ஜனதா தளம் வேட்பாளர்களில் 6 பேர், லோக் ஜனசக்தி வேட்பாளர்களில் 6 பேர் கிரிமினல்கள் ஆவார்கள். இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்களில் 5 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ள 8 வேட்பாளர்களில் 4 பேர் குற்றவாளிகள்.

இந்த கிரிமினல்கள் அனைவரும் பண வசதி படைத்த கோடீஸ்வரர்களாக உள்ளனர். கிரிமினல்களில் 146 பேர் கோடீஸ்வர அந்தஸ்தில் இருக்கிறார்கள். இதனால் வேட்பாளர்களில் 4–ல் ஒருவர் கோடீஸ்வரர் என்று தெரிய வந்துள்ளது.

வரீஸ்நகர் சுயேட்சை வேட்பாளர் பினோத்குமார் ரூ.74 கோடி சொத்துக்களுடன், முதல்கட்ட தேர்தல் வேட்பாளர்களில் பெரிய கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 583 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 53 பேர்தான்.

மேலும் 583 பேரில் 332 பேர் 10–ம் வகுப்பு கூட படிக்காதவர்கள். 241 வேட்பாளர்கள் பட்டதாரிகள். 3 வேட்பாளர்கள் பள்ளிக்கூடம் பக்கமே போகாதவர்களாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top