மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும்: மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

இந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் பா.ஜ.க., மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு வாய்ப்பிருந்தால், மோடிக்கு தோல்வியை பரிசளிப்பதற்காக நிதிஷ்குமார் அரசிற்கே வாக்களிப்பேன் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களை ஏமாற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, மரியாதை குறையவாக நடத்துவதால், நரேந்திர மோடியுடனான தன்னுடைய உறவை முறித்து கொள்வதாக கடந்த ஜூன் மாதம், ராம் ஜெத்மலானி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top