இந்தியன் வங்கி கடன் வட்டி குறைப்பு

45891973இந்தியன் வங்கி கடன்களுக்கான வட்டியை 0.3% குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியன் வங்கியின் அடிப்படை கடன் வட்டி விகிதம் 9.65 சதவிகிதமாக இருக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்டவையும் கடந்த சில நாட்களில் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.5% குறைத்திருந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top