ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

cddef4a8-2692-49c9-80b6-ebf11a378450_S_secvpfஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேனா நேற்று கொழும்பு திரும்பினார்.

ஜெனீவா பயண அனுபவம் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கடந்த தடவை ராஜபக்சே ஐ.நா. கூட்டத்துக்கு சென்றிருந்தார். ஜோதிடர்களின் பேச்சை நம்பி 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தியதால் அவர் தலைவிதி மாறிப்போனது.

இல்லையெனில் இப்போதும் அவர்தான் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இந்த தடவையும் அவர்தான் ஐ.நா. சபை கூட்டத்துக்கு சென்று இருப்பார்.

ஜோதிடர்களை ராஜபக்சே கண்மூடித்தனமாக நம்பி விட்டார். அவர்கள் அவரை மூலையில் உட்கார வைத்து விட்டனர்.

விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து ஒழித்து விட்டதாக ராஜபக்சே பீற்றிக் கொள்கிறார். அதில் கொஞ்சமும் உண்மை இல்லை.

இலங்கையில் வேண்டுமானால் விடுதலைப்புலிகள் இல்லாமல் இருக்கலாம். வெளிநாடுகளில் இன்னமும் விடுதலைப்புலிகள் மிகவும் பலத்துடன் உள்ளனர்.

இவ்வாறு சிறிசேனா கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top