மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

201510030027082182_TASMAC-StaffAssociationHunger-strikeBattles_SECVPFதமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காயிதே மில்லத் கல்லூரி பின்புற சாலையில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத்தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மோகன், மாநில பொதுச்செயலாளர் தனசேகரன், மாநில செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, ‘மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும்’ என்றார்.

உண்ணாவிரதம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-

மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை மதுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கூட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். அரசு காலி பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்தி, டாஸ்மாக் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு மாற்று பணிகளை உருவாக்கி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் ஜவாருல்லா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top