முடக்கப்பட்ட தாய்லாந்து அரசின் இணைய தளங்கள் செயல்பாட்டுக்கு வந்தன

இணைய தாக்குதலின் காரணமாக முடங்கிப்போயிருந்த தாய்லாந்து அரசின் இணையதளங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன.

இந்தத் தளங்களின் மீது ஒருங்கிணைந்தவகையில் நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக, இவை முடங்கிப்போயிருந்தன.

அரசின் இணையத் தளத்திற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்காக ஃபயர்வால் ஒன்றை உருவாக்க முயலும் ராணுவ அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தியதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தாய்லாந்து அரசின் இந்த திட்டம் பொருத்தமற்றது என அவர்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் அரசால் வெளிப்படுத்தப்பட்ட இந்த திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top