நெய்வேலி என்.எல்.சி.யில் பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் தொழிலாளி பலி!

NLCநெய்வேலி என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.

நெய்வேலி என்.எல்.சி.யில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் இன்று இரண்டாவது சுரங்கத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ராஜாவை தடுத்திருக்கிறார். இதையடுத்து, ராஜாவுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில், தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் ராஜாவை சுட்டிருக்கிறார்.

இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top