ஜம்மு காஷ்மீரில் போலியாக தேர்தலை நடத்துகிறது இந்தியா: பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் புகார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலி யான தேர்தலை நடத்துவதாகவும், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசுவதற்கு முன்பாக இவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (ஓஐசி) ஜம்மு காஷ்மீர் விவகார தொடர்புக் குழு கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அஜிஸ் பேசியதாவது:

இந்திய-பாகிஸ்தான் இடை யிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சர்வதேச எல்லை பகுதியில் இந்திய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அப்பகுதியில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. எனவே, இதுகுறித்து பாரபட்ச மற்ற விசாரணை நடத்தவும், தாக்குதலை தடுத்த நிறுத்தவும் ஓஐசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காஷ்மீரில் ராணு வத்தை குவித்து தேர்தலை இந்தியா தொடர்ந்து நடத்தி வருகிறது. எனவே, அப்பகுதி மக்களின் கருத்தை அறிவதற்காக நியாயமான முறையில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

காஷ்மீர் விவகாரம் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நிபந்த னையற்ற பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆனால் இந்தியா நிபந்தனை விதித்தால்தான் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலையிலான பேச்சுவார்த்தை தடைபட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top