கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் சாலைமறியல்!

road blockஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே இன்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பு, கடந்த 13-ம் தேதி ‘பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்’ மற்றும் ‘தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு’ சார்பில் மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 15 நாள் தடுப்பு காவலில் இட்டு சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று, கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள சாலையில் மாணவர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களின் இப்போராட்டத்தினால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top