எச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்குகள் 15 சதவீதம் சரிந்தன

e88e16e8-d6a4-4ae1-a916-462a92553bf2_S_secvpfவருவாய் தொடர்பான கவலைகள் காரணமாக எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன.

நாட்டின் நான்காவது பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஜூலை-ஜூன் நிதியாண்டு வருவாய் ரூ.17,153.44 கோடி என்றும், ஜூன் மாதம் முடிந்த காலாண்டின் வருவாய் ரூ.4,465.50 என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை-செப்டம்பர் காலாண்டு வருவாய் தொடர்பாக இந்த மாதத்தின் 4-வது வாரத்தில் அறிவிக்க உள்ளது. ஆனால், முந்தைய காலாண்டை விட இந்த காலாண்டின் வருவாய் குறையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து பங்குச்சந்தைகளின் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் 14.75 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.837.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 14.99 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.834.85 ஆக இருந்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top