20 ஓவர் போட்டி: இந்தியா–தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

9f9a0c2b-b5c2-43ff-b6ae-2b26f177d05e_S_secvpfதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா– இந்திய ‘ஏ’ அணியிடம் தோற்று இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். தென்ஆப்பிரிக்க அணி பலம் பொருந்தியது என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்.

கேப்டன் தோனி, வீராட்கோலி, ரெய்னா, ரோகித்சர்மா, ரகானே போன்ற சிறந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் கலக்கிய வேகப்பந்து வீரர் அரவிந்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் டுபெலிசிஸ், டிவில்லியர்ஸ், மில்லர், ஹசிம்அம்லா, டுமினி, குயின்டன் காக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக விளையாடிய 20 ஓவர் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயிடம் தோற்று இருந்தது. தென் ஆப்பிரிக்காவும் கடைசியாக விளையாடிய 20 ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.

நாளைய 20 ஒவர் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் வருமாறு:–

இந்தியா: டோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, வீராட்கோலி, ரெய்னா, ரகானே, அம்பதி ராயுடு, ஸ்டூவர்ட்பின்னி, அஸ்வின், புவனேஸ்வர்குமார், ஹர்பஜன்சிங், அமித்மிஸ்ரா, அக்க்ஷர் பட்டேல், மொகித்சர்மா, அரவிந்த்.

தென்ஆப்பிரிக்கா: டுபெலிசிஸ் (கேப்டன்), ஹசிம்அம்லா, குயின்டன் டிகாக், டிவில்லியர்ஸ், டுமினி, மில்லர், பெகருதீன், இம்ரான் தாகீர், அல்பி மோர்கல், அபோட், கிறிஸ் மாரிஸ், ரபடா, எட்டிலீ, ஜோன்டோ, மெர்ச்சன்ட் டி லாங்கே.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top