குற்றம் கடிதல் ஒரு ரசிகனின் பார்வையில்

12033135_1680743435490373_2229778261362171116_n (1)

குற்றம் கடிதல் (2015) திருக்குறளில் குற்றம் கடிதல் என்று வரும் ஒரு குறள் (எனக்கு தெரிந்து ஒன்று) உண்டு.

அது

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் அன்றொரு நாள்,

இந்த குறளுக்கான முழு அர்த்தத்தை தெரிந்திட உணர்ந்திட அலசிப் பார்த்ததில் பல தமிழ் அறிஞர்கள் திருக்குறளுக்கு எழிய தமிழில் உரை எழுதியிருந்தது தெரியவந்தது.

இந்த குறளுக்கு  உரை “குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்”

இந்த குரலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகவே “குற்றம் கடிதல்” லை நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தெரிந்த முகம் என்று யாரும் இல்லை. தெரிந்தவர்கள் போல தோன்றும் முகமாவது இருக்கிறதா என்றும் கவனித்துப்பார்தேன், அப்போதும் யாரும் அடையாளம் தெரியவில்லை. ஒருவேளை தமிழ் சினிமா பார்த்து நாள் ஆகிவிட்டது அதனால் தான் எனக்கு யாரும் தெரியவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன். “குற்றம் கடிதல்” இந்த படம் வெளிவரும் முன்னமே சிறந்த படத்திற்கான தேசிய விருதினை தட்டிசென்றதொடு மட்டுமல்லாமல் இந்த படம் திரையிடப்பட்ட திரைப்பட விழா அத்தனையிலும் பாராட்டையும் பரிசையும் அள்ளிக்குவித்தது தமிழ் சினிமா உலகுக்கு பெருமையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தி எதிர்பார்ப்பையும் கிளப்பிவிட்டிருந்தது.

இந்த எதிர்பார்ப்பே முதல் நாளே பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது. தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் திரையில் தோன்றி மறைந்த அடுத்த நொடி “ஆறும் அது ஆழமில்லை” என்ற பாடல் ஒலிக்க தோன்றியது. அதற்கு முன்னம் வரை என்ன கதையாக இருக்கும் என்ற எண்ணம் உடனே மனதில் இருந்து விலகி இதுவாக தான் இருக்கும் என்ற நினைப்பு குடிகொண்டுவிட்டது. (இங்கே இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும், இலை மறை காயாக தெளிவு படுத்தியதற்கு..)

ஒரு நாள் சம்பவம் தான். நேரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் எடிட்டிங் மிகவும் முக்கியம். கொஞ்சமும் கவனம் சிதறாமல் எடிட்டிங் கையாண்டுள்ள C.S. பிரேம் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும். எல்லாமே எதார்த்தம். ஏமாற்றம் தராத திரைக்கதை, லாஜிக் என்று சிந்தித்து பார்த்தால் எங்குமே உதைக்காத கதை என எல்லாமே ஏறுமுகத்தில் தான் இருக்கிறது. கதை சிறுகதை தான். ஆனால் அந்த கதையை கையாண்டுள்ள விதம் பார்வையாளர்களை திரையில் இருந்து விழித்திரையை எடுக்காத வண்ணம் பார்த்துக்கொண்டது இயக்குனரின் அருமையான நேர்த்தி. பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கலாமா? அடிக்க கூடாதா ? இந்த கேள்விக்கு அடிக்க கூடாது என்று அரசு ஆணையையே பிரப்பித்துவிட்டது.

இருந்தாலும் இன்றைய பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கிறார்களா? இல்லையா? அடிக்கிறார்கள் என்றால் அரசாணைக்கு என்ன மதிப்பு? அடிக்கவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு என்ன மதிப்பு? இந்த கேள்விகளுக்குக்கான விடை ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கே வெளிச்சம். அதெல்லாம் சரி… மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்கிறார்கள். அப்படியானால் மாதா (அம்மா) பிள்ளைகள் தவறு செய்யும்போது கண்டிக்கிறார், ஒரு சில சமயம் அடியும் கொடுக்கிறார், பின்னர் பிதா (அப்பா) கண்டிப்பு காட்ட பல அப்பாமார்கள் அடிக்கத்தான் செய்வார்கள். பின்னர் குரு (ஆசான்) அடிக்க கூடாது என்று அரசு சொல்வதால், இவர்கள் கண்டிப்புக்காக அடித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். கடைசியாக தெய்வம் (கடவுள்) – செய்த குற்றத்துக்கான தண்டனையை (என்றாவது ஒருநாள்) வழங்கியே தீருவார். மாதா, பிதா மற்றும் தெய்வம் தண்டித்தால் தவறில்லை. ஆனால் இந்த நால்வர் அந்தஸ்தில் கடவுளுக்கு முன்னால் இருக்கும் குரு அடித்தால் அது தவறு. கண்டிப்பு மிக மிக அவசியம்.

ஒரு மாணவன் பகல் பொழுதை ஆசிரியருடன் கழிக்கிறார். மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆசான்கள் மாணவர்களை அடித்துதான் நேர்வழிப்படுத்தவேண்டும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு தெரிந்து அடித்து துவைத்தெடுக்கும் ஆசானைவிட அடிக்காமல் பார்வையாலேயே மிரட்டும் ஆசிரியர்களுக்கே நான் அதிகம் பயந்துள்ளேன். கற்றதும் பெற்றதும் ஆசிரியரிடம். ஆயிரம் நன்றிகள் அவர்களுக்கு சொன்னாலும் அது போதாது.

பின்குறிப்பு: பாரதியார் பாடலை எத்தனையோ இயக்குனர்கள் படத்தில் பாடலாக்கியிருக்கிரார்கள். ஆனால் இயக்குனர் பிரம்மா செய்தது போல எவரும் செய்திடவில்லை. அற்புதமான படைப்பு.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top