தமிழகத்தில் ரகசியமாக ஷேல் (பாறை) எரிவாயு எடுக்கும் ஒஎன்ஜிசியின் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 28 அன்று சுற்றுச் சூழல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இராமநாதபுர சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் .ஜவஹிருல்லா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…

சென்ற ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய பெட்ரோல் ஏரிவாயுக் கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதேபோல் இராமநாதபுரத்தில், மன்னார் வளைகுடா, உயிர்கோள் காப்பகப் பகுதியிலும், பறவைகள் சரணாலயம் மற்றும் மக்கள் குடியிருப்பு அமைந்துள்ள இடங்களில் 22 புதிய கிணறுகள் அமைக்க 14.8.2015 அன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த ONGC யின் மூலமாக நாங்கள் மீத்தேன் கிணறுகள் எடுக்கவில்லை. பெட்ரோல், கியாஸ் மட்டும்தான் எடுக்கின்றோம் என்று ONGC அதிகாரிகள் அந்தக் கூட்டங்களிலே சொன்னார்கள். ஆனாலும்கூட, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ONGCயினுடைய புதிய கிணறுகளுக்கு அனுமதி அளிக்கவில்லை, அதை நான் வரவேற்கின்றேன்.

அதேநேரத்தில் இப்போது புதியதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை பருவ நிலை மாற்றத்திற்கான நிபுணர்கள் மதிப்பீட்டுக் குழு ONGC புதிய கிணறுகளுக்கு இனிமேல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை. அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது என்று அறிவித்திருக்கின்றார்கள். இப்போது என்ன பிரச்சினை என்றால், மீத்தேன் எரிவாயு எடுக்கக்கூடிய திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று இந்த மாமன்றத்திலேயே அரசு அறிவித்திருக்கின்றது.

ஆனால் அதேநேரத்தில் Shale Gas என்று சொல்லக்கூடிய பாறை எரிவாயு, அதேபோல பாறை எண்ணெய் இதை எடுக்கக்கூடிய மறைமுகத் திட்டத்திலே ONGC நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

இந்த Shale Gas என்பது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக Hydraulic Fracturing Method சுருக்கமாக fracking Method என்று சொல்வார்கள். நீரியல் முறிப்பு. இந்த அடிப்படையில் Shale Gas எடுப்பதற்கு பல நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் வந்திருக்கின்றது.

என்னுடைய கோரிக்கை என்னவென்றால், தமிழ்நாடு அரசு மிகவும் விழிப்புடன் இருந்து வெறுமனே பெட்ரோலியத்தை எடுக்கின்றோம், Gas ஐ எடுக்கின்றோம் என்ற பெயரில் இந்த Shale Gas எடுக்கக்கூடிய, அதுவும் காவேரிப் படுகைப் பகுதிகளில் Shale Gas எடுப்பதற்காக வேண்டி, இந்தியாவில் நான்கு இடங்களில் காவேரிப் படுகைப் பகுதியையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதற்கு இந்த அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம், மாநில அரசாங்கத்தின் அனுமதியையும், கருத்துக்கேட்புக் கூட்டத்தையுமே நடத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக சொல்லியிருக்கக்கூடிய சூழலில் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது. ஷேல் வாயு திட்டத்தையும் அனுமதிக்காது என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் விளக்கம் அளித்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top