கிரண்குமார் ரெட்டி கட்சிக்கு செருப்பு சின்னத்திற்கு ஒப்புதல் வழங்கியது தேர்தல் ஆணையம்!

kiran kumar reddy's jai samakyandra party தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ஜெய் சமக்யாந்திரா கட்சி என பெயரிட்டு உள்ளார்.

‘‘ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு துடைப்பம் சின்னத்தை தேர்ந்து எடுத்து பிரபலப்படுத்தியது போல் கிரண்குமார் ரெட்டியும் தனது கட்சிக்கு புதுமையான சின்னத்தை தேர்ந்து எடுக்க முடிவு செய்தார்.அதன்படி அவர் தனது கட்சிக்கு ‘செருப்பு’ சின்னத்தை தேர்ந்து எடுத்தார். இதற்கு தேர்தல் கமிஷன் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதையடுத்த விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது கட்சி சின்னத்தை கிரண்குமார் ரெட்டி அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:–மக்கள் அனைவரும் செருப்பு அணிகிறார்கள். அதனால் இந்த சின்னம் எளிதில் அவர்களிடம் பிரபலமடையும் செருப்பு அதனை அணிபவர்களின் சுமையை தாங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கிறது. சாதி, மதம் போன்ற எந்த பாகு பாட்டையும் காட்டுவதில்லை. சமத்துவத்தின் சின்னமாக செருப்பு இருக்கிறது.

ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது அது போல இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்.மாநில பிரிவினைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வில்லை. நீங்கள் பணியாற்ற வேண்டும். ’’ஜெய் சமக் யாந்திரா’’ என்பது வெறும் கோஷம் அல்ல. அது லட்சியம்.தெலுங்கானா பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த மனு எற்கப்படுவதற்காக புதிய கட்சி தொடங்குவதை தாமதப்படுத்தினேன்.

இது இளைஞர்கள் கட்சியாக இருக்கும். மக்களாகிய நீங்கள் சொல்லும் வேட்பாளரை தேர்தலில் நிறுத்துவேன். இதற்காக உங்களிடம் கருத்து கேட்டேன். உங்கள் கருத்துப்படி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் பேசினார்.

தனது பேச்சின் போது தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபுநாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆகியோரை கிரண்குமார் ரெட்டி கடுமையாக தாக்கி பேசினார்.மாநில பிரிவினைக்கு இருவரும் ஆதரவு கொடுத்து விட்டு தற்போது எதிர்ப்பது போல் நாடக மாடுகிறார்கள். முதல்–மந்திரி பதவிக்காக அவர்கள் பொய்யான தகவலை சொல்லி வருகிறார்கள் என்று கிரண்குமார் ரெட்டி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top