ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுகிறார் மேரிகோம்

e097f3e5-160d-41ef-943a-e6a481c7ef4b_S_secvpfஇந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோம். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற அவர் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில் பிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக மேரிகோம் அறிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வெல்வதை அவர் இலக்காக கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எனது நோக்கமாக இருக்கிறது. கடவுளின் கருணை இருந்தால் அந்த சாதனையை படைக்க முடியும். இந்த ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top