இந்திய அணியை மேம்படுத்துவதில் கோலி சரியான பாதையில் செல்கிறார்: இயன் சேப்பல் பாராட்டு

e79598b1-3f42-4afb-a18f-7ad82712e03a_S_secvpfஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான இயன் சேப்பல் கூறியதாவது:–

வீராட் கோலியின் ஆக்ரோசமான அணுகு முறையை இந்திய அணிக்குள் புகுத்தி தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இலங்கை மண்ணில் சாதித்துள்ளார். அவரது தலைமை ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. தனது அணியை முன்னேற்றுவதில் வீராட் கோலி சரியான பாதையில் செல்கிறார்.

அடிலெய்ட் டெஸ்டில் சாத்தியமில்லாத வெற்றிக்காக இந்திய அணியை சவாலுக்கு தயார் படுத்தினார். கிரிக்கெட்டை சுவராசியமாக தனது வீரர்களுக்கே மாற்றுவது தான் கேப்டனின் முக்கிய கடமை அதில் கோலி சிறப்பாக செயல்படுகிறார்.

20 ஓவர் கிரிக்கெட்டினால் சர்வதேச போட்டிகளில் தாக்கம் பெற்ற இரண்டு கேப்டன்களில் ஒருவர் வீராட் கோலி. மற்றொருவர் ஸ்டீவ் சுமித்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top