இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

sfsdfdsf

இலங்கையில்ன்  2009ல்  ஈழ தமிழருக்கு எதிராக இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை வேண்டும்மென்றும் ,விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் , இலங்கைக்கு சர்வதேச நீதிகளை பெற்றுதரும் வகையில் ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை கண்டித்தும்   சென்னையில் இன்று (28.09.15) அமெரிக்க தூதரகம் முற்றுகை போரட்டம் நடை பெற்றது

20150928005554

20150928005545gsgsd

sfsdfdsf

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உலகில் மூன்றில் இரண்டு மடங்கு கடல் வர்த்தகம் இந்திய பெருங்கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. இதனை தனது கட்டுபாட்டில் கொண்டுவருவது அமெரிக்காவின் நீண்டகால கனவு. அந்த பகுதியில் 60 ஆண்டுகாலமாக தங்கள் உரிமைக்காக போராடிவரும் ஈழத்தமிழர்களின் போராட்டமானது, அமெரிக்காவிற்கு இடையூறாக வருமென்று அமெரிக்க அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளில் கூறியிருந்தனர்.

ஆகவே, தமிழீழ விடுதலை போராட்டதை நசுக்க இலங்கை அரசுக்கு ஆயுதங்கள், ராணுவப் பயிற்சி போன்ற எல்லா வகையான உதவிகளையும் செய்தது அமெரிக்கா. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் இலங்கையுடனான தங்கள் வர்த்தக நலன்களுக்காக தமிழர்களை கொல்ல ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. அதனை பயன்படுத்தி இலங்கை அரசு 2008-ல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்தது. ஒவ்வொருவரும் தங்கள் நலன் சார்ந்து ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கி அழித்து வருகின்றனர்.

2015092800554fsdfdsf6

20150928005545fsdfds

fsdfsd

தமிழர்களை கொன்றுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைத்த அமெரிக்காவிற்கு, தமிழீழ விடுதலை எனும் கோரிக்கை தமிழ் மக்களிடம் உயிர்ப்போடு இருப்பது மேலும் சிக்கலை கொடுத்தது. தமிழீழ விடுதலை கோரிக்கையை அழிக்க, 2009 -ற்கு பிறகு மிக தீவிரமாக இந்தியா போன்ற நாடுகளோடு இணைந்து இலங்கைக்கு ஆதரவாக வேலை செய்து வருகிறது அமெரிக்கா.

ஒரு இனத்தை அழிப்பதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்து, மௌனம் காத்து ஒரு பச்சை துரோகத்தினை நமக்கு செய்து வருகின்றன. இதை அமெரிக்காவும், இந்தியாவும், ஐநாவும் முன்னிருந்து நடத்தி வருகின்றன. அதன்படி தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காதபடி வருடந்தோறும் ஐநா அவையில் அயோக்கிய தனமான தீர்மானங்களை 2012 -லிருந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.

20150928005545dsad

sadsa

20150928005545gfdgdf

அமரிக்காவின் அயோக்கிய தீர்மானங்கள்:-

2012 -ல் இலங்கை அரசானது தன்னைத்தானே விசாரிதுக்கொள்ளும் என்ற தீர்மானத்தை கொண்டுவந்தது அமெரிக்கா. அதாவது கொலைகாரனே கொலையை விசாரிப்பது இதுதான் அமெரிக்காவின் நீதி.

dasda

201dsad50928005547

இனப்படுகொலையின் தடையங்களை அழிக்க இலங்கை அரசுக்கு கால நீட்டிப்பை கொடுத்துவிட்டு 2013 -ல் மீண்டும் இலங்கைக்குள்ளான உள்நாட்டு விசாரணை என்ற தீர்மானத்தை கொண்டுவந்தது.

பின்னர் 2014-ல் இருபக்க விசாரணை என்று சொல்லி தமிழர்களின் தரப்பையும் விசாரிக்க வேண்டுமென்று சொல்லி இனப்படுகொலையை போர்குற்றம் என்று மாற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தது. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை மறுத்தது. தமிழர்களை மதச்சிறுபான்மையினராக வரையறை செய்தது. அதன்படி ஐநாவானது மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்துவதாக அறிவித்தது. அந்த குழு இலங்கைக்கு உள்ளேயே அனுமதிக்க படாமல் வெளியிலிருந்து சாட்சியங்களை விசாரித்து விசாரணை அறிக்கையை மட்டும் தயார் செய்தது. அந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் வெளிவரத் தயாராக இருந்தது.

கொலைகார ராஜபக்சே அரசு அமேரிக்கா சார்பில் இருந்து மாறி சீனாவின் பக்கம் சாய்ந்ததால் ஆட்சி மாற்றத்திற்கான வேலைகளில் அமேரிக்கா ஈடுபட்டு, தமக்கு சார்பான மைத்திரிபால சிறிசேனவையையும், ரணில் விக்ரமசிங்கேவையையும் ஆட்சியில் அமர்த்த வேலை செய்தது. தனக்கு சாதகமான அரசு வந்தவுடன், மார்ச்சில் வரவேண்டிய அறிக்கையை மேலும் ஆறு மாதகாலம் தள்ளிவைத்து, மீண்டும் கால அவகாசத்தை இலங்கைக்கு அளித்தது. இந்தியாவும் அதன் பின்னணியில் இருந்தது.

20150928005dsadsa547

dsadsad

இதற்கிடையே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மூன்றுபேர் குழுவின் அறிக்கை உள்ளிட்ட ஐநா மனித உரிமை ஆணையரின் அறிக்கை இம்மாதம் வெளியாகி இனப்படுகொலையை மறைத்து, கலப்பு விசாரணை என்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கலப்பு விசாரணை முறை (Hybrid Mechanism) என்பது இலங்கையின் உள்நாட்டு நீதிபதிகளுடன், சர்வதேச நீதிபதிகள் குழு ஒன்றும் இணைந்து வேலை செய்து போரில் குற்றமிழைத்தவர்களுக்கு இலங்கையின் அரசியல் சாசனத்தின் கீழ் தண்டனை வழங்கும் முறையாகும். இலங்கையின் அரசியல் சாசனம் என்பது தோல்வியடைந்த ஒன்று என்பதை நாம் கடந்த அறுபது ஆண்டுகாலமாக பார்த்து வருகிறோம். கொலைகாரனே கொலையை விசாரிக்க வழி செய்யும் கலப்பு விசாரணை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதில் மதிமுக  பொது செயளாலர் வைகோ, மே பதினேழு இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமுமுக,  தமிழ்புலிகள் ,தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம்  உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டர்,  இந்த போராட்டத்தின் போது அமெரிக்க கொடி எரிக்கபட்டது

20150928005547fdsf

20150928fdsff005547

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள் பின்வருமாறு:-

“முற்றுகை போர் முற்றுகை போர்
ஈழ விடுதலையை அழிக்க துடிக்கும்
அயோக்கிய அமெரிக்க தூதரகம்
முற்றுகை போர் முற்றுகை போர்

எதிர்கிறோம் எதிர்க்கிறோம்
ஈழ விடுதலைக்கு எதிரான
அமெரிக்காவின் தீர்மானத்தை
தமிழர்கள் நாங்கள் எதிர்க்கிறோம்

ஏற்கமாட்டோம் ஏற்கமாட்டோம்
ஒன்றுபட்ட இலங்கை என்பதை
ஒருபோதும் ஏற்கமாட்டோம்

அயோக்கிய அமெரிக்காவே
தலையிடாதே தலையிடாதே
தமிழீழ விடுதலையில் தலையிடாதே
தடுக்காதே தடுக்காதே
தமிழீழ விடுதலையை தடுக்காதே

தமிழர்களை இனப்படுகொலை செய்ய
வியூகம் வகுத்த அமெரிக்காவே
ஆயுதம் கொடுத்த இந்தியாவே
மவுனம் காத்த ஐ.நா மன்றமே
ஆதரவு கொடுத்த இங்கிலாந்தே
மூடி மறைக்காதே மூடி மறைக்காதே
இனப்படுகொலையை மூடி மறைக்காதே

தொடராதே தொடராதே
கலப்பு விசாரணை என்ற பெயரில்
உள்நாட்டு விசாரணை மூலம்
இனப்படுகொலையை தொடராதே

கலப்பு விசாரணை கேட்கவில்லை
உள்நாட்டு விசாரணையை கேட்கவில்லை
சர்வதேச விசாரணை கேட்கிறோம்

இனப்படுகொலை இனப்படுகொலை
அறுபது ஆண்டு காலமாக
தமிழர்கள் மீது நடத்தியது
திட்டமிட்ட இனப்படுகொலை
போர் குற்றமல்ல போர்குற்றமல்ல
மனித உ ரிமை மீறல் அல்ல
திட்டமிட்ட இனப்படுகொலை

நீதி வேண்டும் நீதி வேண்டும்
இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்
இனப்படுகொலைக்கு நீதி என்பது
விடுதலையே விடுதலையே
தமிழீழ விடுதலையே

வல்லாதிக்க அமெரிக்காவே
சுரண்டி கொழுத்த இங்கிலாந்தே
தமிழர் விரோத இந்தியாவே
உள்நாட்டு விசாரணை அமைக்க
நடந்தது என்ன தெரு சண்டையா??
இனப்படுகொலை இனப்படுகொலை

ஏற்கமுடியாது ஏற்கமுடியாது
புலிகள் மீதும் விசாரணை என்பதை
ஏற்கமுடியாது ஏற்கமுடியாது

ஐ.நா மன்றமே அயோக்கிய மன்றமே
அமெரிக்காவின் அடியாள் மன்றமே
திரும்பபெறு திரும்பபெறு
புலிகள் மீதான அவதூறுகளை
உடனடியாக திரும்பப்பெறு

பிரதிநிதிகள் பிரதிநிதிகள்
தமிழீழ விடுதலை புலிகள்
தமிழர்களின் பிரதிநிதிகள்

அவமதிக்காதே அவமதிக்காதே
தமிழர் பிரதிநிதிகளை அவமதிக்காதே

தடை நீக்கு தடை நீக்கு
புலிகள் மீதான தடையை நீக்கு

விசாரணை வேண்டும் விசாரணை வேண்டும்
இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும்
சர்வதேச விசாரணை வேண்டும்
கொன்றுகுவித்த இலங்கை மீதும்
வியூகம் வகுத்த அமேரிக்கா மீதும்
ஆயுதம் கொடுத்த இந்தியா மீதும்
ஆதரவு கொடுத்த இங்கிலாந்து மீதும்
சர்வதேச விசாரணை வேண்டும்
இனப்படுகொலைக்கான விசாரணை வேண்டும்

ஐ.ந மன்றமே ஐ.நா மன்றமே
பொதுவாக்கெடுப்பு நடத்து பொதுவாக்கெடுப்பு நடத்து தமிழீழ விடுதலைக்கான
பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து

எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம்
13வது சட்டத்திருத்தத்தை
அயோக்கிய அமெரிக்க தீர்மானத்தை
தமிழர்கள் நாங்கள் எதிர்க்கிறோம்

ஒரே தீர்வு இறுதி தீர்வு
தமிழீழ விடுதலையே
ஒரே தீர்வு இறுதி தீர்வு

தீர்வாகாது தீர்வாகாது
விடுதலை தவிர்த்த எந்த தீர்வும்
இனப்படுகொலைக்கு தீர்வாகாது

சமரசமில்லை சமரசமில்லை
தமிழீழ விடுதலையில்
ஒருபோது சமரசமில்லை
மறக்க மாட்டோம் மறக்கமாட்டோம்
இனப்படுகொலையை மறக்கமாட்டோம்
மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்
இனப்படுகொலையில் பங்கெடுத்த
இந்திய இங்கிலாந்து அமெரிக்காவை
தமிழர்கள் நாங்கள் மன்னிக்க மாட்டோம்

போர் தொடுப்போம் போர் தொடுப்போம்
பயங்கரவாத அமேரிக்கா மீது
பொருளாதார போர் தொடுப்போம்
புறக்கணிப்போம் புறக்கணிப்போம்
அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
kfc உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை
தமிழ்நாட்டை விட்டு விரட்டியடிப்போம்

down down america
up up tamil eezam
we reject hybrid mechanism
we reject domestic investigation
we want international investigation
conduct referendum
we want tamil eezam
we want tamil eezam

ஏகாதிபத்திய அமெரிக்காவே
வெளியேறு வெளியேறு
தமிழர் பெருங்கடலை விட்டு வெளியேறு
தமிழீழத்தை விட்டு வெளியேறு
அனுமதிக்க மாட்டோம் அனுமதிக்க மாட்டோம்
தமிழர் பெருங்கடலில் நுழைவதற்கு
வல்லாதிக்க நாடுகளை அனுமதிக்க மாட்டோம்

கொளுத்துவோம் கொளுத்துவோம்
அமெரிக்க தீர்மானத்தை கொளுத்துவோம்

வெல்லட்டும் வெல்லட்டும்
தமிழர் போராட்டம் வெல்லட்டும்
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்

ஓயமாட்டோம் ஓயாமாட்டோம்
தமிழீழம் கிடைக்கும் வரை
தமிழர்கள் நாங்கள் ஓயாமாட்டோம்

ஐ.நா மன்றமே அமெரிக்காவே
மதித்திடு மதித்திடு
தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தை
மதித்திடு மதித்திடு
தமிழர் இறையான்மையை மதித்திடு”

இறுதியில் போராட்டகாரர்கள் அமெரிக்க கொடி, ராஜபக்சே உருவபடம், ஐநா தீர்மானம் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 -க்கும் அதிகாமானோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துசென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top