அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருக்கிறது: வைகோ

vaiko200ஜெனிவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வரும் 30-ம் தேதி அமெரிக்கா முன் மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இதற்கு இந்திய அரசு நிர்பந்திக்கக் கோரியும், சென்னை தி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற்றனர். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அப்போது பேசிய தலைவர்கள், தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களுக்காக போராடும் தலைவர்களை ஒருங்கிணைத்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top