சர்வதேச விசாரணை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்: நவநீதிம் பிள்ளை

navipillaiசமரசங்கள் செய்யப்பட்டே இலங்கை தொடர்பாக ஐநாவில் தீர்மானம் வருகிறது என்று ஐநா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதிம் பிள்ளை கூறியுள்ளார்.

இலங்கை மனித உரிமை மீறல்களை காமென்வெல்த் நீதிபதிகள் விசாரிப்பார்கள். என்று திருத்தம் செய்யப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க கொண்டுவந்த வரைவு தீர்மானத்தின் மீதான விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநா முன்னாள் மனித உரிமைகள் ஆணையர் நவநீதிம் பிள்ளை செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: சமரசங்கள் செய்யப்பட்டே இலங்கை தொடர்பாக ஐநாவில் தீர்மானம் வருகிறது போதிய ஆதரவு வாக்குகள் இருப்பதை உறுதி செய்த பிறகே இலங்கை தொடர்பாக ஐநாவில் தீர்மானம் வருவதாகவும், சர்வதேச விசாரணை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

இலங்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டதை இந்தியா தடுத்திருக்க முடியும். ஆட்சியில் இருந்த ராஜபட்சவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை.. இலங்கை பிரச்னையில் அரசியல், பொருளாதார அடிப்படையில் பல நாடுகள் செயல்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top