அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை ஏற்றது இலங்கை

sri-lankaஅமெரிக்க வரைவு அறிக்கையில் கூறியுள்ளவாறு காமன்வெல்த் நாடுகளின் வழக்கறிஞர்களின் உதவியுடன் இலங்கையில் விசாரணை நடத்த இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பு நாடுகளிடையே நடைபெற இருந்த விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டுக்குள் விசாரணை நடத்தும் அமெரிக்காவின் அறிக்கையை தாம் வரவேற்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காமன்வெல்த் நீதிபதிகளுடன் இலங்கையில் சிறப்பு வழக்கறிஞர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் இலங்கையின் அரசியலமைப்புக்குட்பட்டு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top