தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

strikeமேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

வடகர்நாடக குடிநீர் தேவைக்கான கலசா பண்டூரி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கோவா மாநில அரசை கண்டித்தும், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையொ‌ட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top