பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

IMG_7963இன்று பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து துணைத்துதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர் இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக மூத்த தலைவர் குனங்குடி அனிபா, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள் முருகன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், மேலும்  SDPI கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இன்று   வெளியிடப்பட்ட அறிக்கை;

தனது பிராந்திய நலன் என்ற ஒற்றை நோக்கத்திற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை இனப்படுகொலை செய்ய இலங்கையோடு 2009ல் துணை நின்றது அமெரிக்கா. அதே அமெரிக்கா கடந்த மூன்று வருடங்களாக ஐநாவின் நடைமுறையின் படி இலங்கை அரசின் மீது நடைபெற்றிருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை தடுக்கும் விதமாக ஐநா அவையில் தொடர்ச்சியாக தீர்மானங்களை கொண்டு வந்தது

இந்நிலையில் இலங்கையில் அமெரிக்காவுக்கு சாதகமான சிறிசேனா-இரணில் ஆட்சி அமைந்தவுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை முற்று முழுவதுமாக அழிக்கும் வேலையை தற்போது அமெரிக்கா செய்துவருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டிருக்கவேண்டிய ஐநா விசாரணை அறிக்கையை தள்ளி வைக்க  ஐநா அவைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது அமெரிக்கா. அதன்பின் இலங்கையில் தற்போது நல்லாட்சி நடைபெறுவதால் உள்நாட்டு விசாரனையை இலங்கை தொடங்கவேண்டுமென்றும் அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென்றும் சொல்லி நான்காவது ஆண்டாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநாவின் 30வது மனித உரிமை கூட்டத் தொடரில் கடந்த 18.09.2015 அன்று தனது முதல் வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறது.

அதில் இலங்கையில் நல்லிணக்கம் திரும்பிவிட்டது எனவும், உள்கட்டமைப்பு வசதிகள் சரியான விதத்தில் ஏற்பட்டிருக்கிறதென்றும், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டனர் என்றும் பல்வேறு பொய்களை சொல்லி அதனால் உள்நாட்டு விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் இந்த செயலானது கடந்த 16.09.2015 அன்று ஐநாவின் மனித உரிமை ஆணையத்தினால் இலங்கையின் மீது சுமந்தப்பட்ட குற்றசாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையும் கூட இறுதி வரைவு திர்மானத்தில் மாற்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை முழுவதும் காப்பாற்றிடவும், அதே நேரத்தில் தமிழர்களின் அரசியல் கோரிக்கையை முற்றும் முழுவதுமாக அழித்துவிடவும் அமெரிக்கா முனைந்திருக்கிறது.

அமெரிக்காவின் இந்த செயலை கண்டித்து வரும் 28.09.2015 திங்கள்கிழமையன்று காலை 10மணிக்கு எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்திலிருந்து சென்னையிலுள்ள அமெரிக்க துணைத்  தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே 17 இயக்கம் நடத்துகிறது. இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

 

கோரிக்கைகள் :

 

1.தமிழர்கள் நாங்கள் அமெரிக்கா சொல்லும் உள்நாட்டு பொறி முறையையோ, அல்லது ஐநா சொல்லும் உள்நாட்டு  பொறி முறையின் இன்னொரு வடிவமான கலப்பு பொறிமுறையையோ  ஏற்றுக்கொள்ளவில்லை.

 

2.ஐ.நாவே!

1948 முதல்  2011 வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பையும் உடனே நடத்து.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top