போர்க்குற்றம் குறித்த அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமாக திருத்தம் செய்ய இந்தியா யோசனை?

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கண்டனம் தெரிவித்தது.

போர்க்குற்றம் இழைத்து மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. இதுகுறித்து குழு அமைத்து விசாரணை நடத்தியது. அதன் அறிக்கையை ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தாக்கல் செய்துள்ளது.

அதில் இலங்கை ராணுவம் போர் குற்றம் இழைத்துள்ளதை உறுதி செய்துள்ளது. இதற்கிடையே போர்க் குற்றம் குறித்த தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா விரைவில் தாக்கல் செய்ய உள்ளது.

அதில் போர்க் குற்றங்களை இலங்கையில் அதாவது உள் நாட்டில் சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு ஈழத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அரசு அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் படி உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து ஐ.நா. சபையில் இடம் பெற்றுள்ள சர்வதேச நாடுகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது. இதற்கு ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் இந்தியா இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் திருத்தம் செய்ய இந்தியா ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

மத்திய அரசு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் அறிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும், அதற்கு முன்னதாக திருத்த யோசனைகளை இந்தியா முன்வைக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்னர் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திலும் இந்தியா திருத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அமெரிக்க தீர்மானத்தின் 14 பரிந்துரைகளை நீக்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வரைவு தீர்மானத்தில் 26 பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் 14 பரிந்துரைகளை முற்றிலும் நீக்கி வரைவு தீர்மானத்தை மென்மை படுத்த வேண்டும் என இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைக்க பரிந்துரை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் உள்நாட்டு விசாரணை நடத்துவதற்கு ஆதரவான வரிகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இலங்கைக்கு சாதகமாக திருத்தங்களை கொண்டுவந்துவேடுமோ என்று புலம்பெயர்ந்தவர்களும் தமிழ் தேசியவாதிகளும் அச்சம் கொள்வது நியாயமாகத்தான் இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top