242 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்: நிதிஷ்குமார் வெளியிட்டார்

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

அக்டோபர் 12–ந்தேதி முதல் நவம்பர் 5–ந்தேதி வரை தேர்தல் நடக்கிறது. நவம்பர் 8–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பீகார் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வலுவான கூட்டணி அமைத்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான இந்த கூட்டணியில் லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 242 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பீகார் முதல்– மந்திரி நிதிஷ்குமார் இன்று வெளியிட்டார். கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அவர் வெளியிட்டார்.

243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வேட்பாளர் பட்டியலில் லல்லுவின் இரண்டு மகன்களும் இடம் பெற்றுள்ளனர். தேஜ்பிரதாப் என்ற மகன் மகுபா தொகுதியிலும், தேஜஸ்வி என்ற மற்றொரு மகன் ரகோபூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ்குமார் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

இடஒதுக்கீடு முறையை மறு ஆய்வு செய்ய சொல்லும் ஆர்.எஸ்.எஸ். சுப்ரீம் கோர்ட்டு போல் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top