அமெரிக்க வரைவு அறிக்கை மீது விவாதம்: இலங்கைக்கு ஆதரவாக 4 நாடுகள் கருத்து

geneva2ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு அறிக்கையில் இலங்கைக்கு எதிராக உள்ள கடுமையான வாசகங்களை நீக்க வேண்டும் என நான்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் 30-ஆவது மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரி்க்கா வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்திருக்கிறது. நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு 2-ஆவது நாளாக இன்று கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

அதில், வரைவு தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக உள்ள சில கடுமையான வாசகங்களுக்கு பாகிஸ்தான், ரஷியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இலங்கை விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் அந்த நான்கு நாடுகள் கூறியிருக்கின்றன. இலங்கையின் ஆதரவு இருந்தால் மட்டுமே வரைவு தீர்மானம் வெற்றி பெறும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச அரங்கில் இலங்கையின் கரங்களை பலப்படுத்த வேண்டுமே தவிர, அதனை வலுவிழக்கச் செய்யக்கூடாது என்றும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வரைவு அறிக்கைக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, கனடா, அயர்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரி்க்க ஆதரவு நாடுகள் கருத்து தெரிவித்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top