தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

nakeeran-gopalநக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நவம்பர் 16 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கோபால், நக்கீரன் செய்தியாளர் தா. பிரகாஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பரிசுத் திட்டம் என்ற பேரில் வாக்காளர்களுக்கென 2 ஆயிரத்து 340 கோடி ரூபாயை செலவிட ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக கடந்த 5 ஆம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. இது முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக்கூறி, ஜெயலிலதா சார்பில்,சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல். ஜெகன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top