ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வந்த சில தீர்மானங்களுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு

flag-srilanka-1214ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திலுள்ள சில அம்சங்களை எதிர்ப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தீர்மானம் தொடர்பான முறைசாராக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமை அவையின் உறுப்புநாடுகள் பங்கேற்று விவாதித்தன.

இதில் கலந்துகொண்ட ஐ.நா மனித உரிமை அவைக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆர்யசிங்க, அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள தீர்மானத்தின் சில வாசகங்கள், தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக விமர்சித்தார்.

குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுப் பணிகள் விவகாரத்தில் எதிர்விளைவுகளை உண்டாக்கும் வகையில் அமெரிக்காவின் தீர்மானம் இருப்பதாக ஆர்யசிங்க குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top