பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சுமூகமான உறவை இந்தியா விரும்புகிறது: ராஜ்நாத் சிங்

rajnathபாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சுமூகமான உறவையே இந்தியா விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானுடனான நட்புறவுக்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அதற்கு அந்நாடு மதிப்பளித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான், சீன எல்லையில் ஆய்வு நடத்துகிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top