கொரிய ஓபன் பேட்மின்டன் இறுதிப்போட்டி: அஜய் ஜெயராம் தோல்வி

24e7794a-0f12-4be8-930d-445dde2ce81d_S_secvpfகொரிய ஓபன் பேட் மின்டன் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்தது. இன்று காலை நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அஜய்ஜெயராம் உலகின் நம்பர் ஒன் வீரரான சென்லாங் (சீனா) மோதினார்கள்.

உலக தரவரிசையில் 32–வது இடத்தில் இருக்கும் அஜய் ஜெயராம் 14–21, 13–21 என்ற கணக்கில் சென்லாங்கிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடைபெற்றது.

அஜய் ஜெயராம் இந்த ஆண்டு மலேசியா மாஸ்டர்ஸ், சுவிஸ் ஓபன், ரஷிய ஓபன் ஆகிய போட்டி தொடர்களில் அரைஇறுதி வரை முன்னேறி இருந்தார்.

தற்போது கொரிய ஓபனில் இறுதிப்போட்டி வரை நுழைந்து வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top