இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

SUBRAMANYA_SWAMYபாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி ,

நண்பர் என்ற முறையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகவும்,கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார் .

இலங்கையில் சர்வதேச விசாரணை குறித்து சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை எனக் கூறிய சுப்பிரமணியன் சுவாமி ,வெளிநாட்டுக் கொள்கைகளில் தலையிடும் அதிகாரம் தமிழகத்திற்கு இல்லை என கூறினார்.

இலங்கை பிரதமர் ரணிலை தான் சந்தித்ததாக கூறிய சுவாமி, இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளே உள்நாட்டு விசாரணை போதும் என தெரிவித்ததாக தன்னிடம் ரணில் கூறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சுவாமியின் இந்த பேச்சிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top