சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு மே பதினேழு இயக்கத்தினர் போராட்டம்!

20150920233709gdsgesrg

தமிழீழ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை மறுக்கும் ஐநாவை கண்டித்து, இன்று (21.09.15) சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட போவதாக மே பதினேழு இயக்கம் சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை திட்டமிட்டபடி சென்னை அடையாரில் உள்ள ஐநா அலுவலகம் மே பதினேழு இயக்கத்தினரால் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

20150920233707fafaf

இந்த போராட்டம் குறித்து மே பதினேழு இயக்கம் வெளியிட்டிருந்த விரிவான அறிக்கை:-

“இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான இனப்படுகொலை இலங்கையில் தமிழருக்கெதிராக நடந்தேறி ஆறு ஆண்டுகள் முடிவடையப்போகிறது. ஆனால் இன்னமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை ஐநா அமைப்பானது தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பேச்சை கேட்டு தடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் 2012லிருந்து வருடந்தோறும் ஏமாற்று தீர்மானங்களை ஐநா அவையில் நிறைவேற்றி வந்தார்கள்.

20150920233652erreytr

அதன்படி கடந்த ஆண்டு(2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவானது இலங்கைக்கு உள்ளே கூட அனுமதிக்கப்படவில்லை. இலங்கைக்கு வெளியிலிருந்தே சாட்சியங்களைக் கேட்டு, விசாரணை அறிக்கையை மட்டும் தயாரித்தது மார்த்தி அத்திசாரி தலைமையிலான மூவர் குழு.

20150920233708fasfdsag

20150920233708r3wqrewtrdg

சர்வதேச விசாரணை என்று அனைவரையும் ஏமாற்றிய ஐ.நா- வானது, தற்போது அந்த அறிக்கையின் மீது இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட கலப்பு விசாரணை (Hybrid Mechanism) நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

கலப்பு விசாரணை முறை (Hybrid Mechanism) என்பது இலங்கையின் உள்நாட்டு நீதிபதிகளுடன், சர்வதேச நீதிபதிகள் குழு ஒன்றும் இணைந்து வேலை செய்து போரில் குற்றமிழைத்தவர்களுக்கு இலங்கையின் அரசியல் சாசனத்தின் கீழ் தண்டனை வழங்கும் முறையாகும்.

20150920233654dsfdsg b

இலங்கையின் அரசியல் சாசனம் என்பது தோல்வியடைந்த ஒன்று என்பதை நாம் கடந்த 60 ஆண்டு காலமாக பார்த்து வருகிறோம். இலங்கையின் அரசியல் சாசனத்தின் கீழ் தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது என்பதே உண்மையாக இருக்கிறது. எனவே இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட கலப்பு விசாரணை என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

20150920233707edrewr

ராஜபக்சேவுக்கு பிறகு மைத்ரிபால சிறிசேனா பதவியேற்ற பின்னும், அங்கு தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதுவும் மாறிவிடவில்லை என்பதற்கு சாட்சியமாக பல்வேறு அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிறிசேனா அரசு ஜனநாயாகப் புரட்சியை ஏற்படுத்தி விட்டதாக ஐநா அதிகாரிகள் பொய் சொல்லி வருகிறார்கள். இந்த அதிகாரிகள்தான் போர் நடக்கும் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படுவது வெளியில் தெரியாமல் இருக்க, இலங்கை அரசுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர்கள்.

vfdsgvds

fdsfsdf

ஐ.நா அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக செயல்பட்டார்கள் என்று ஐ.நா உள்ளகவிசாரணை குழுவின் தலைவரான சார்லஸ் பெட்ரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். அதை ஐநாவும் பின்னர் ஒத்துக்கொண்டது. ஆனால் தற்போதைய தீர்மானத்தில் இதை பற்றிய எந்த ஒரு பதிலும் இல்லாமல் கள்ளமவுனம் காக்கிறது ஐநா அவை.

தமிழர்களுக்கு நடந்த மற்றும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிற இனப்படுகொலையை மறைப்பதற்காகவும், இனப்படுகொலையாளிகளை காப்பதற்காவுமே கலப்பு விசாரணை (Hybrid Mechanism) என்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கலப்பு விசாரணை எனும் முறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது உள்நாட்டு விசாரணையின் மற்றுமொறு வடிவமே.

20150920233706fsa

மேலும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையானது, தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையை மனித உரிமை மீறல் என்றும், போர்க்குற்றம் என்றும் சுருக்கி, நீதியை மறுக்கும் வேலையை செய்கிறது. அது வெறும் போர்க்குற்றமல்ல. அங்கு நடப்பது இனப்படுகொலை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும்.

20150920233707fsffsf

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதியை மறுக்க முனைப்பு காட்டி வரும் அமெரிக்கா மற்றும் இந்திய அரசினையும், ஐநா அவையினையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எட்டு கோடி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் அடிப்படையிலும், ஈழத்தின் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தின் அடிப்படையிலும் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையின் மீது ஒரு சர்வதேச விசாரணையினை ஐ.நா மன்றம் கொண்டு வர வேண்டும். இனப்படுகொலைக்கு நீதியாக பாதிக்கப்பட்ட மக்களிடையே தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பினை ஐ.நா உடனடியாக நடத்த வேண்டும்.

20150920233707fsf

இதனை ஐ.நா-மன்றமானது தற்போதைய கூட்டத்தொடரிலேயே தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தை மே 17 இயக்கம் நடத்துகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20150920233707ffdsf

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழீழப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், இலங்கையில் பொதுவாக்கெடுப்பை நடத்த கோரியும் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top