இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி ரயில் மறியல்: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது!

Isaipriya-222இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்துக என்பது உள்ளிட்ட தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் ரயில்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் நடத்த வேண்டும் என்கிற தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை இந்திய அரசு நிறைவேற்றக் கோரியும், ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்ததையடுத்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top