போர்க்குற்றத்தை விசாரிக்க உள்நாட்டு விசாரணையே போதுமானது: மைத்ரிபால சிறிசேன

sirisenaஇலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றத்தை விசாரிக்க, உள்நாட்டு விசாரணையே போதுமானது என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர். மகிந்த ராஜபக்ச இல்லாத அரசு தான் நாட்டிற்கு தேவை என கூறியிருக்கிறார். தான் அதிபராக இல்லாமல் ராஜபக்ச அதிபராக இருந்திருந்தால், ஐ.நா.விசாரணை அறிக்கை க‌டினமானதாக இருந்திருக்கும் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும், முந்தைய அரசு உலக நாடுகளை பகைத்து கொண்டதாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளித்தாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தற்போதைய அரசு‌ சிறந்த வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதால், சர்வதேச அளவில் இலங்கை மீதான தவறான எண்ணங்கள் மாறியுள்ளதாக சிறிசேன தெரிவித்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top