விஷ்ணுப்ரியா தற்கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

9c8bfc19-ae41-432d-8ca5-65c37faf938b_S_secvpfவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா திடீரெனத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தன்னுடைய சாவுக்கும் கோகுல்ராஜ் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தனது உடலை பிணக் கூறாய்வுக்குட்படுத்த வேண்டாம் என்றும் அவருடைய கடிதத்தில் எழுதியிருப்பதாகவும் சொல்லப்படுவது பல்வேறு ஐயங்களுக்கு இடமளிக்கிறது. தன்னுடைய வேலைகளைத் தன்னால் திறம்படச் செய்ய இயலவில்லை என்றால், வேலை வேண்டாம் என உதறிவிட்டு வெளியேறுவதுதான் பொதுவாக யாரும் எடுக்கிற முடிவாக இருக்க முடியும். அப்படி வேலையைவிட்டு வெளியேறாமல், இதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதையும் ஏற்க இயலவில்லை.

ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மறைமுகமான, கடுமையான அச்சுறுத்தல் அவருக்கு விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தையே விஷ்ணுப்ரியா அவர்களின் சாவு ஏற்படுத்துகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்தவர் என்கிற முறையில் அவருடைய சாவு பல்வேறு கேள்விகளுக்கு இட மளிக்கிறது.

எனவே, விஷ்ணுப்ரியா அவர்களின் மரணத்தை மையப் புலனாய்வு விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top