அமெரிக்க அரசை கண்டித்து போராட்டம் செய்தவர்கள் விடுதலை

12038312_980794211942307_1465405679761472876_nஈழதமிழர் மீது நடத்தபட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள்நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டுவரும் அமெரிக்க அரசை கண்டித்து அவர்களின் வணிக பொருள்களை  புறக்கணிக்கும் போரட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த செப்டம்பர்  ஐந்தாம் தேதி    சென்னை அசோக் நகரில் உள்ள கேஎஃப்சி உணவத்தில்  கழிவை கொட்டும்  நூதன போராட்டத்தில்     இளையத்லைமுறை கட்சினர் மற்றும் மறுமலர்ச்சி   நாம் தமிழர் கட்சியினர்  ஈடுபட்டனர் . அதன் தொடர்ச்சியாய் . அமெரிக்க தூதரகத்தில் வாயிலில் கொக்க கோலா மற்றும் பெப்சியால் கால் கலுவும் போரட்டத்திலும் ஈடுப்பட்ட போது கைது செய்யப்பட்டனர் .

 

11990388_980678738620521_7461539587334876710_nகாவல் துறை போராட்டத்தில் ஈடு பட்டவர்களை  கடுமையாக தாக்கியது. பின்னர் சைதாபேட்டை நீதி மன்றதின் நீதிபதி முன் ஆஜர் படுத்த பட்டு புழல்  சிறையில் அடைக்கப்பட்டனர் .அவர்களின் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகள் உட்பட  173 ,176 உட்பட ஐந்து பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

மேலும் வழக்கு

முதலில்  பதிவு செய்த வழக்கிற்கு செப்டம்பர் 8  ந்தேதி காலை  பெயில் கிடைத்ததால் அவர்கள்  வெளியில் வருவதை தடுக்கும் வகையில் அன்று காலை மேலும் ஐந்து வழக்குகள் பதியப்பட்டு வெளியே வராமல் அரசு பார்த்துகொண்டது . இது அமெரிக்க  எதிர்ப்பை கட்டுபடுத்தும் முயற்சி என போரட்ட குழுவினர் தெரிவித்தனர்

நீண்ட சட்ட போராட்ட்த்திற்க்கு பின் நேற்று மாலை  அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற்றனர். அவர்களுக்கு மே 17 தமிழர் தேசிய  முன்னனி உட்டபட பல்வேறு தமிழ் அமைப்புகள் சேர்ந்து மாலை போட்டு வரவேற்றனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top