புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் கோகுல கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

18df01fd-0115-4d38-a4bc-840a842df9b0_S_secvpfபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக சார்பில் கோகுல கிருஷ்ணன் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தொழிலதிபர் கோகுல கிருஷ்ணன் உடனடியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

புதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குள் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. வேட்பாளரை நிறுத்துவதில் ஆளும் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.

வேட்பாளரை நிறுத்தும் விவகாரத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், திமுக, காங்கிரஸ் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் என்ஆர்காங்கிரஸ், அதிமுக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் கோகுல கிருஷ்ணன் புதுவை மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அவர் உடனடியாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top