‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு: பாலா!

balaதீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ”நான் சிகப்பு மனிதன்”.

பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் திடீரென்று தூங்கி விழும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் விஷால்.

இந்நிலையில், நேற்று நடந்த நான் சிகப்பு மனிதன் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தைப்பற்றி பலரும் ஜாலியாக பேசினார். அதிலும் எந்த விழாவிலும் அதிகமாக பேசாத டைரக்டர் பாலாவும் இந்த விழாவில் ஜாலியாக பேசினார்.

அவர் பேசும்போது, இந்த படத்தில் எனது நிஜ கேரக்டரையே காப்பியடித்து படமாக்கி விட்டனர் என்றார். காரணம், நான் தினமும் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு செல்வேன். அதேமாதிரி,நள்ளிரவு படப்பிடிப்பு என்றால் அதிகாலையில்தான் செல்வேன். இதை நான் வேணுமென்று செய்யவில்லை.

எல்லாத்துக்கும் காரணம் தூக்கம்தான். நல்லா தூங்கி விடுவேன். அதனால் இந்த படத்தில் விஷால் தூங்கிக் கொண்டேயிருப்பார் என்பதை கேள்விப்பட்டதும் என்னை காப்பியடித்துதான் இந்த கேரக்டரை டைரக்டர் திரு உருவாக்கி விட்டனர் என்று தோன்றியது என்று பாலா கிண்டலாக பேச, விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top