இலங்கை போர் குற்ற விசாரணை அறிக்கை இன்று ஐக்கிய நாடுகள் சபையில் தாக்கல்

united nations building in nycஇலங்கையின் இறுதிப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையில் இன்றுதாக்கல் செய்யப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 30 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. அதில், கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை அறிக்கையை, இன்று பிற்பகல் 3 மணிக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் ஜித் அல்-உசேன்‌ தாக்கல் செய்கிறார். மேலும், தனது பரிந்துரைகளையும் அவர் சமர்ப்பிக்க உள்ள‌தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top