அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

883ab8a0-66aa-46c8-9d95-c311d27dad69_S_secvpfகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா)– இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதினார்கள்.

இதில் ஜோகோவிச் 6–4, 5–7, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3½ மணி நேரம் தேவைப்பட்டது.

இந்த ஆண்டில் ஜோகோவிச் கைப்பற்றிய 3–வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். ஆன்டி முர்ரேயை (இங்கிலாந்து) வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தையும் இந்த ஆண்டில் அவர் கைப்பற்றி இருந்தார்.

28 வயதான ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 2–வது முறையாக கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு 2011–ல் பட்டம் வென்று இருந்தார்.

ஜோகோவிச் ஒட்டு மொத்தமாக கைப்பற்றிய 10–வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.

34 வயதான ரோஜர் பெடரர் 3–வது முறையாக ஜோகோவிச்சிடம் கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டியில் தோற்றுள்ளார். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் தோற்று இருந்தார்.

17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த பெடரர் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் எதுவும் பெறவில்லை. கடைசியாக 2012–ல் விம்பிள்டன் பட்டத்தை வென்று இருந்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top