ஆந்திராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 16பேர் உயிரிழப்பு

fly-ashஆந்திர மாநிலம் கண்டேபள்ளி என்னும் இடத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

மேற்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து சாம்பல் கட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கிழக்கு கோதாவரி மாவட்டத்தை நோக்கிச் சென்றது. அப்போது நடுவழியில் 35 விவசாய தொழிலாளர்கள் அந்த லாரியில் ஏறினர்.

பின்னர் அந்த லாரி கண்டேபள்ளி என்ற பகுதியில் சென்றபோது கவிழ்ந்தது. இதில் லாரியிலிருந்த சாம்பல் கட்டிகள் விழுந்ததில் தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் காயமடைந்தனர். லாரி ஓட்டுநர் கண் அயர்ந்ததால் தான் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. தப்பிச்சென்ற அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top