ம.பி.யில் 89 பேர் உயிரிழந்த வெடிவிபத்துப் பகுதியில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு

MP-CM-Shivraj-Singh-Chouhan-310மத்தியப் பிரதேசத்தில் 89 பேர் உயிரிழந்த வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவரிடம் அப்பகுதி மக்கள், சம்பவம் குறித்து விளக்கினர். ஜபுவா நகரில் கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பாறைகளை உடைக்க பயன்படும் வெடி பொருட்கள் திடீரென நேற்று வெடித்தன. இதனால், கட்டடம் நொறுங்கி விழுந்ததில், 89 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வெடி விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top