கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து கோவையில் இன்று உள்ள கே.எஃப்.சி கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

2015091201501998

2015ytry0912015017

தமிழகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்து வரும் சூழலில் கேவையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வகிக்கிறது. போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

201509120tytr15017

trt

தனது வணிக நோக்கத்திற்காக தமிழினப்படுகொலைக்கு துணைபோகும் அமெரிக்காவை தமிழர்கள் நாங்கள் ஒருபோது தமிழ் மண்ணில் வணிகம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று முழங்கியவாறு இந்த கேஎஃப்.சி முற்றுகை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

20150912015017GFD

2015091201501tytr8

மேலும் போராட்டதில் ஈடுபட்டவர்கள் தனி ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியும், அமெரிக்க அரசின் இலங்கை உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

201fsd50912015017

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top