அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

tr

20150912000847tr

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

201509120008rtr27rtr

20150912000846

20150912000828

இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அமெரிக்கா தனது தீர்மானத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

20150912000830423423

20150912000845

20150912000844

மேலும், ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவுகூறும் விதமாக தங்களது உடல் முழுவது மாட்டு இறைச்சி மட்டும் ரத்தத்தினால் பூசிக்கொண்டு, கை கால்களில் கட்டுகள் இட்டுக்கொண்டு தமிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு அவர்கள் ஆர்பாட்டம் செய்தனர். இலங்கையில் தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றே உரிய தீர்வு எனவும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

20150912000843tret

tret

2432423

201509120008302432

பின்னர் அமெரிக்க வணிக பொருட்களான பெப்சி உள்ளிட்டவற்றில் செருப்பு கழுவிய அவர்கள் அமெரிக்க கொடியையும் தீ வைத்து எரித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் பங்குபெற்ற 200 -க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்து அருகிலுள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top