சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது.

20150911005

ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை நடைபெற்றது. மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொண்டன.

10339624_1165646823452775_7142058257088218555_n

11146518_1165646683452789_5307976841447834874_n

2015091100565

இதில், திருமுருகன் காந்தி, பொழிலன், அரங்ககுணசேகரன், கி.வெ.பொன்னைய்யன், தபசிக்குமரன்,சுந்திரமூர்த்தி, ஓவியர்.வீரசந்தானம், அருணபாரதி, க. பாபு மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2015091100565365

2015091100565433

201509110056

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பே ஒரே தீர்வு” , “உள்நாட்டு விசாரனையல்ல; இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையே எங்கள் கோரிக்கை” என முழங்கியவாறு அமெரிக்க வணிக நிறுவன பொருட்களான பெப்சி, கோக் உள்ளிடவற்றை காலில் போட்டு மிதித்தும் தரையில் கொட்டியும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

2015091100565343

434

20150434911005655

அமெரிக்காவிற்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதன் வணிக பொருட்களை புறக்கணித்து பொருளாதார போர் ஒன்று தொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

201509110056434

பின்னர் அமெரிக்க கொடிக்கு தீயிட்டு எரித்த அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top