வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்!

chance-of-rainவெப்பச்சலம் காரணமாக, தமிழகத்தில், அடுத்த சில தினங்களுக்கு, சில இடங்களில், மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், மீண்டும் பதிவாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், சென்னை உட்பட ஒருசில பகுதிகளில், கனமழை பதிவாகி வருகிறது. இதற்கு வெப்பச்சலனமே காரணம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேகம் அதிக அளவில் திரள்கிற இடங்களில் மழை பெய்வதாகவும், அடுத்த சில தினங்களுக்கு, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top