ஊட்டி ஏரியில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம்; தேனிலவு படகு இல்லம் மூடப்பட்டது

dedede

ஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது.  ஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்பு,லாட்ஜ் உள்ளன.இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் வந்து ஏரி யில் கலப்பதால் ஏரி  மாசடைந்து வந்தது.இதையடுத்து,ஏரியை தூய்மைப்படுத்த கடந்த இரு ஆண்டுக்கு முன் தமிழக அரசு ரூ.4 கோடியே 27 லட்சம் ஒதுக்கியது. இதனைதொடர்ந்து, கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டது. ஏரியில் கழிவுநீா் கலக்காத வண்ணம் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.மேலும், நீரேற்றும் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டன.

இதில், ஏரியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டது. ஏரியை தூய்மையாக வைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டா் தலைமையிலான ஊட்டி ஏரி  பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது். இந்நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், சேறும் சகதியும் கலந்து நிறம் மாறி காணப்பட்டது. சில இடங்களில் கருமையான நிறத்தில் காணப்பட்டது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் இருந்து கழிவுநீா் நேரடியாக ஏரியில் திறந்து விடப்பட்டதாலேயே ஏரி  நீா் கருப்பு நிறத்திற்கு மாறி கடும் துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக கோவை மண்டல மேலாளா் சங்கா் தலைமையில் நகராட்சி, மாசு கட்டுபாட்டு வாரிய  அதிகாரிகள் நேற்று ஏரி ,அருகே உள்ள காட்டேஜ், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தினார்கள்.அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலப்பதாலே நிறம் மாறியது மட்டுமின்றி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசியதும் தெரிய வந்தது.

எனினும், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சி கழக மண்டல மேலாளா் சங்கா் கூறுகையில்,‘ ஏரின்யில் கழிவுநீரை திறந்து விடும் காட்டேஜ்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏரியில் கழிவுநீரை திறந்து விடுபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவா்களின் கழிவுநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும். காட்டேஜ் நிர்வாகத்தினா் கழிவுநீா் சுத்திகாிப்பு தொட்டி அமைக்காமல் உள்ளனா். இது தொடா்பாக ஆய்வு நடத்தியுள்ளோம். இதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும். ஏரியில் கழிவுநீா் மாசடைந்துள்ளதால்,ஏரி சரி யாகும் வரை தேனிலவு படகு இல்லம் மூடப்படும்‘, என்றார் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top