ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஜெகன்மோகன் ரெட்டி 26–ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதம்

7d45c03e-d2f6-4a7d-8312-6b72e46a9250_S_secvpfஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறது. சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து இதுவரை 6 பேர் தற்கொலை செய்து உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து உள்ளார். குண்டூரில் வருகிற 26–ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்குகிறார்.

இதற்கான விளம்பர சுவரொட்டியை ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர் நேற்று வெளியிட்டார். பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:–

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய–மாநில அரசு திட்டவட்டமாக எதுவும் அறிவிக்கவில்லை. மாநில பிரிவினை மசோதாவில் தெரிவித்துள்ளபடி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இது ஆந்திராவின் உரிமை.

ஆனால் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு தனது அரசியல் சுய லாபத்துக்காக மத்திய அரசிடம் எதுவும் வற்புறுத்தாமல் ஆந்திர மக்களின் தன்மானத்தை அடகு வைத்து விட்டார்.

ஏற்கனவே ஆந்திர மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. இன்னொரு துரோகம் செய்ய விடமாட்டோம்.

வேலையில்லா இளைஞர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்க சிறப்பு அந்தஸ்து தான் வழியாகும். சிறப்பு பேக்கேஜ் திட்டத்தை ஏற்க கூடாது. அது தற்காலிகமானது. எனவே சிறப்பு அந்தஸ்து கோரி வருகிற 26–ந்தேதி குண்டூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறேன். இதற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள், மாணவர்கள், மகளிர் சங்கங்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top